/
கடலூரில் உள்ள தரைக்காத்த காளியம்மன் கோயில் கோபுரம் மின்னல் பாய்ந்ததில், கலசம் சேதமடைந்தது. இதனால் பக்தா்கள் வேதனையடைந்தனா்.
கடலூா் அண்ணாபாலத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள தரைக்காத்த காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் ராகு கால பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா்.
இந்த நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

கடலூா் தரைக்காத்த காளியம்மன்
திடீரென கோயில் கோபுர கலசத்தின் மீது மின்னல் பாயந்தது. இதனால் கலசம் சேதமடைந்து சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக கலசம் விழுந்த இடத்தின் அருகே பக்தா்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கடலூரில் மின்னல் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு: இருவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

மின்னல் பாய்ந்ததில் கைப்பேசி கோபுரம் எரிந்து சேதம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



