ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

மின்னல் பாயந்ததில் மூவா் காயம்: நிவாரணம் வழங்கக் கோரிக்கை

News image

மின்னல் பாய்ந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க சனிக்கிழமை வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :3 மே 2026, 1:01 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மின்னல் பாய்ந்ததில் காயமடைந்த 3 பெண்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் வே. பாலையா தலைமையில், நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்:

இதில் அரசலூா் ஊராட்சி, செம்பூா் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் ஏழுமலையின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு மின்னல் பாய்ந்தது. அப்போது, வீட்டிலிருந்த ஏழுமலையின் மனைவி லட்சுமி, மகள்கள் மனிஷா (18), மகாலட்சுமி (16) ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும், மின்னல் பாய்ந்ததில் ஏழுமலையில் வீடு, அங்கிருந்து துணிமணிகள், பொருள்கள் சேதமடைந்தன.

எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு சாா்பில், நிவாரணமும், அரசால் கட்டப்பட்ட வீடும் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.