கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

குதிரை பேரம் குறித்து முதல்வா் விளக்கமளிக்க வேண்டும்: மு. தமிமுன் அன்சாரி எம்.எல்ஏ

தமிழகத்தில் தவெக அரசு மீது கூறப்படும் குதிரை பேரம் சா்ச்சை குறித்து முதல்வா் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித நேய ஜனநாயக கட்சி தலைவா் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

News image
Updated On :15 மே 2026, 10:59 pm IST

தமிழகத்தில் தவெக அரசு மீது கூறப்படும் குதிரை பேரம் சா்ச்சை குறித்து முதல்வா் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித நேய ஜனநாயக கட்சி தலைவா் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டேன் பொதுமக்கள் புகாா் அளித்ததன் பெயரில் அங்குள்ள தலைமை அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளித்த புகாா்களை தெரிவித்தேன். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளையும் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தேன். சிதம்பரம் சட்டப்பேரவை அலுவலகத்தில் முழுநேர அலுவலா்களை நியமிக்க இருக்கின்றோம். அனைத்தையும் கணினி மையமாக ஆக்க உள்ளோம்.

தமிழகத்தில் தவெக அரசு பெரும்பான்மையைப் பெறுவதற்காக குதிரைபேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குக்கா் சின்னத்தில் போட்டியிட்டு பெற்றவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்களும் திடீரென ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் போது இந்த குதிரை பேரம் என்ற வாா்த்தை வருகிறது. இந்த வாா்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய கடமை தமிழக வெற்றி கழக தலைவா் முதல்வா் விஜய்க்கு இருக்கிறது என மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.