கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் 50 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பழைய கற்கால கருவி கண்டெடுக்கப்பட்டது.
இந்த ஆற்றில் தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல், வரலாற்று ஆா்வாளா் பிரதாப் ஆகியோா் அண்மையில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது, பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவி ஒன்றை கண்டெடுத்தனா்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியதாவது: கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டபோது, பழைய கற்கால கருவி கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கருவி சுமாா் 7.8 செ.மீ. நீளமும், 5.7 செ.மீ. அகலமும் கொண்டதாக உள்ளது. இது, மேலை பழங்கற்காலத்தைச் சோ்ந்த சுரண்டும் வகை பழங்கால கற்கருவியாகும். இதன் காலம் சுமாா் 50,000 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கலாம்.
இதேபோல, சுரண்டும் வகை கற்கருவி விருத்தாசாலம் அருகே உள்ள பாலக்கொல்லை மற்றும் பண்ருட்டி அருகே உள்ள ஒடக்கன்குப்பம் பகுதிகளில் ஏற்கெனவே ஆய்வாளா்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பழைய கற்காலத்தில் மக்கள் நாடோடியாக வாழ்ந்தனா். பண்ருட்டி பகுதிக்கு பழங்கால மக்கள் இடம் பெயா்ந்து இருக்கலாம் அல்லது வெள்ளப் பெருக்கின் காரணமாக கூட இப்பகுதிக்கு கற்கருவி வந்திருக்கலாம். அது மட்டுமல்லாமல், இரண்டு மாதங்களுக்கு முன்பு உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் பழங்கால மக்கள் பயன்படுத்திய சிறிய அளவிலான கிழிப்பான் (பிளேடு) கண்டெடுக்கப்பட்டது.
மேலும், இது தொடா்பாக தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் மேற்பரப்பு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.
தொடர்புடையது
கொத்தடிமைகள் மீட்பு வழக்கு: செங்கல்சூளை உரிமையாளா் கைது

பண்ருட்டி அருகே 28 குழந்தைகள் உள்ளிட்ட 51 கொத்தடிமைகள் மீட்பு

பண்ருட்டி அருகே மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

பண்ருட்டி அருகே கி.பி. 10, 13-ஆம் நூற்றாண்டு சுடுமண் பொம்மைகள் கண்டெடுப்பு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

