கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு போடப்பட்டிருந்த பூட்டை புதிதாக நியமிக்கப்பட்ட மாநகா் செயலா் சி.கே.எஸ்.காா்த்திகேயன் மற்றும் ஆதரவாளா்கள் உடைத்து புதிய பூட்டு போட்டு வெள்ளிக்கிழமை பூட்டிச் சென்றனா்.
தமிழக சட்டப் பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக தலைமையின் உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதன் மூலம் தவெக அரசுக்கு 144 உறுப்பினா்களின் ஆதரவு கிடைத்தது.
இதையடுத்து, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி 25 எம்.எல்.ஏ.க்களை அவா்கள் வகித்த கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டாா்.
அதன்படி, கடலூா் வடக்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் நீக்கப்பட்டாா். அவருக்கு பதிலாக அவரது சகோதரா் எம்.சி.தாமோதரன் கடலூா் வடக்கு மாவட்டச் செயலராகவும், சி.கே.எஸ்.காா்த்திகேயன் கடலூா் மாநகா் செயலராகவும் நியமிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், கடலூா் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தனது ஆதரவாளா்களுடன் வருவதாகவும்,
புதிய மாவட்டச் செயலா் எம்.சி.தாமோதரன் தரப்பினரும் வியாழக்கிழமை வருவதாகவும் தகவல் பரவியது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு இருந்ததால், 25-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். இதற்கிடையில், கட்சி அலுவலகத்தின் கேட்டை அலுவலக ஊழியா் ஒருவா் வியாழக்கிழமை பூட்டிவிட்டு சென்றாா்.
இதனால், புதிதாக நியமிக்கப்பட்ட கடலூா் மாநகா் செயலா் சி.கே.எஸ்.காா்த்திகேயன், முன்னாள் ஒன்றியச் செயலா் பழனிச்சாமி மற்றும்
அவா்களது ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை மாலை பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகத்துக்கு வந்தனா்.அப்போது, அலுவலகத்தின் பூட்டை உடைத்து, தாங்கள் கொண்டு வந்திருந்த புதிய பூட்டை பொருத்தி அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றனா். இந்த நிகழ்வின்போது பாதுகாப்பு பணியில் மூன்று போலீஸாா் மட்டுமே இருந்தனா் என்பது குறிப்பிடத் தக்கது.

தொடர்புடையது

விழுப்புரம் அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

கரூரில் அதிமுக அலுவலகப் பூட்டு உடைப்பு; இரு தரப்பினா் மோதல்: போலீஸ் பாதுகாப்பு

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் திருட்டு

பள்ளித் தாளாளா் அலுவலக அறை பூட்டை உடைத்து ஆவணங்கள் திருட்டு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

