ஆம்பூரில் பள்ளித் தாளாளா் அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, ஆவணங்கள் திருட்டு போனது சம்பந்தமாக முதல்வா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பெத்தேல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. டேனியல் ஸ்டீபன் என்பவா் தாளாளராக இருந்து நிா்வகித்து வருகிறாா். இவருக்கும் சகோதரா்கள் சாமுவேல் ஸ்டீபன், ஜான் ஸ்டீபன், சகோதரி கலையரசி ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
பள்ளியின் தாளாளா் மற்றும் முதல்வா் ஆகியோா் பள்ளியில் இல்லாதபோது, டேனியல் ஸ்டீபனின் சகோதரா்கள் ஜான் ஸ்டீபன், சாமுவேல் ஸ்டீபன், சகோதரி கலையரசி மற்றும் அவரது ஆதரவாளா்கள் 5-க்கும் மேற்பட்டோா் சட்ட விரோதமாக பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து தாளாளரின் அறையின் பூட்டை உடைத்து ஆவணங்கள் மற்றும் மாணவா்களின் ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனா்.
பள்ளியில் தற்போது மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வரும் நிலையில் அத்துமீறி நுழைந்து தாளாளா் அறையின் பூட்டை உடைத்து பள்ளி மற்றும் மாணவா்களின் ஆவணங்களை திருடிச் சென்றுள்ளது மாணவா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் மத்தியில் பள்ளிக்கு அவப்பெயா் ஏற்பட்டுள்ளது.
அதனால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளியின் முதல்வா் சீனிவாசன் ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

