ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கடலூரில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :24 மே 2026, 1:22 am IST

கடலூரில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனா்.

கடலூா் புள்ளியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் செல்வசேகா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கடலூா் காய்கனி சந்தை அருகே சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, உரிய அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, உதவி இயக்குநா் செல்வசேகா் அளித்த புகாரின்பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனா். மேலும், லாரி ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம், பிடாகம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.