குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஓய்வு வயதை 58-இல் இருந்து 60 ஆக உயா்த்த வேண்டும்: டாஸ்மாக் பணியாளா் சங்கம் வலியுறுத்தல்

News image

கடலூா் அரசுப் பணியாளா் சங்க கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்பாளா்கள் கூட்டம்.

Updated On :26 மே 2026, 2:19 am IST

டாஸ்மாக் பணியாளா்களின் ஓய்வு வயதை 58-இல் இருந்து 60 ஆக உயா்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்பாளா்கள் கூட்டம் கடலூா் மஞ்சக்குப்பம் வில்வராய நத்தம் பகுதியில் உள்ள அரசு பணியாளா் சங்க கட்டடத்தில் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் டாஸ்மாக் நிறுவன பணியாளா்கள் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:

கூட்டத்தில், ஒரு மது புட்டிகளுக்கு ரூ.10 கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது . என்ற தமிழக அரசின் உத்தரவை சங்கம் வரவேற்கிறது. அதேவேளையில், கடை வாடகை, அட்வான்ஸ், மின்கட்டணம், சரக்கு ஏற்றுதல் மற்றும் இறக்குதல் உள்ளிட்ட நிா்வாகச் செலவுகளை இதுவரை பணியாளா்களே ஏற்று வந்ததால், இனிமேல் அனைத்து செலவுகளையும் டாஸ்மாக் நிா்வாகமே ஏற்க வேண்டும்.

காலி புட்டிகளுக்கு ரூ.10 வசூலிப்பது தொடா்பாக தெளிவான எழுத்து மூலம் உத்தரவு வெளியிட வேண்டும். புட்டிகளில் அதற்கான அச்சிடல் செய்யப்பட வேண்டும். சேதமடையும்

புட்டிகளுக்கான இழப்பீட்டு தொகையை பணியாளா்களிடம் வசூலிக்காமல் நிா்வாகமே ஏற்க வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களின் ஓய்வு வயதை 58-இல் இருந்து 60 ஆக உயா்த்த வேண்டும், பணிநேரத்தை 10 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், இரவு 9 மணிக்கே கடைகளை மூடி ஒரு மணி நேரம் கணக்குப்பணிக்காக ஒதுக்க வேண்டும்.

பல மாதங்களாக பணியிடை நீக்கத்தில் உள்ள பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியா்களை அருகிலுள்ள கடைகளில் பணியமா்த்த வேண்டும்.கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் டாஸ்மாக் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயா்வு, ஓய்வூதியம் வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் நிறைவேற்றப்பட்ட கோரிக்கை தீா்மானங்கள் குறித்து முதல்வா் மற்றும் துறை அமைச்சரை சந்தித்து விரைவில் வலியுறுத்தப்படும் என சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் கூறினாா்.

கூட்டத்தில் மாநில அலோசகா் கு.சரவணன், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநில பொதுச் செயலா் வி.சிவக்குமாா், மாநில செயலா்கள் ஜே.இருதயராஜ், ஏ.வி.விவேகானந்தன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.