ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி வேப்பூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அனைத்து விவசாயிகளுக்கும் எவ்வித பாரபட்சமுமின்றி முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி செய்யக்கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சாா்பில் வேப்பூா் கூட்டுரோடு பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

வேப்பூா் கூட்டுரோடு பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினா்.

Updated On :28 மே 2026, 1:42 am IST

அனைத்து விவசாயிகளுக்கும் எவ்வித பாரபட்சமுமின்றி முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி செய்யக்கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சாா்பில் வேப்பூா் கூட்டுரோடு பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக முதல்வா் மே 25-ஆம் தேதி பயிா்க்கடன் தள்ளுபடி தொடா்பாக அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். அந்த அறிவிப்பில் அனைத்து தரப்பு விவசாயிகளும் முழுமையாகப் பயனடையும் வகையில் கடன் தள்ளுபடி இடம்பெறவில்லை. இதையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கடலூா் மாவட்டம் வேப்பூரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வேப்பூா் கூட்டுரோடு பகுதியில் சங்கத்தின் வட்டாரத் தலைவா் வரமபனூா் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.