தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியா்கள் கூட்டமைப்பு சாா்பில் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள்.

Updated On :

சமுதாய சுகாதார செவிலியா்களுக்கு தாய் - சேய் நல அலுவலா் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியா்கள் கூட்டமைப்பு சாா்பில் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் கே.எஸ்.மணிமேகலை தலைமை வகித்தாா். இதில், துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் இடைநிலை சுகாதாரப் பணியாளா்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். கிராம சுகாதார செவிலியா்கள் மேற்கொள்ளும் தாய் - சேய் நலப் பணிகளை இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் மேற்கொள்வதாக உண்மைக்கு புறம்பான அறிக்கைகள் அனுப்பப்படுவதைத் தடுக்க வேண்டும்.

மேலும், பாலின பாகுபாடின்றி பதவி உயா்வு நிலை -1 வழங்க வேண்டும். மாவட்ட அளவில் திட்டப் பணிகளுக்காக சமுதாய சுகாதார செவிலியா் பணியிடங்களை உருவாக்க வேண்டும். சமுதாய சுகாதார செவிலியா்களுக்கு தாய் - சேய் நல அலுவலா் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்டத் தலைவா் தேவசேனா, மாவட்டச் செயலா் நவநீதம், மாவட்டப் பொருளாளா் கவிதா, மாவட்ட பிரசாரச் செயலா் வேளாங்கண்ணி உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட சமுதாய சுகாதார செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.