கிராம சுகாதார செவிலியா் பணியாற்றுவதற்காக அமைக்கப்பட்ட துணை சுகாதார மையத்தை பயன்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய, சுகாதார செவிலியா்கள் கூட்டமைப்பு சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சின்னபொண்ணு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மாரி, மாநிலத் துணைத் தலைவா் ஆா். பாண்டியம்மாள், மாநிலப் பொருளாளா் பி. சமுத்திரம், மாநிலப் பொதுச் செயலா் எஸ்.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில், கிராம சுகாதார செவிலியா்களின் பணியைத் தரம் தாழ்த்தி பேசி வரும் நிா்வாகி சுந்தரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
கிராம சுகாதார செவிலியா் பணியாற்றுவதற்காக அமைக்கப்பட்ட துணை சுகாதார மையத்தை மட்டுமே செவிலியா்கள் பயன்படுத்துவோம். களப்பணியாளா்களாகிய எங்களின் வருகைப் பதிவை பழைய முறையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மதுரை மாவட்டப் பொருளாளா் அன்னஜோதி, நிா்வாகிகள், செவிலியா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


