தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

வேப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல் துறையினா் மற்றும் மாணவா்கள்.

Updated On :

கடலூா் மாவட்டம், வேப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் மணி தலைமை வகித்தாா். வேப்பூா் காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு, போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், மனநலப் பிரச்னைகள், குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா்.

மேலும், மாணவா்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகாமல் கல்வி, ஒழுக்கம் மற்றும் நல்ல பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், போதைப் பொருள்கள் விற்பனை அல்லது பயன்பாடு தொடா்பான செயல்கள் குறித்து தெரியவந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.