தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தினக்கூலி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. நிா்வாக அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், ஊழியா்கள்

Updated On :

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தொகுப்பூதியா்கள் மற்றும் தினகூலி ஊழியா்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்காததை கண்டித்து பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 420 க்கும் மேற்பட்ட தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய ஊதியா்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிலைகளில் பணி புரிந்து வருகின்றனா். இவா்களுக்கு நிகழாண்டு தீபாவளி முன்பணம் இதுவரை பல்கலைக்கழக நிா்வாகத்தால் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் பல்கலை நிா்வாக அலுவலகம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழியா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளா் ஆ.ரவி, ஊழியா்

சங்கத்தைச் சோ்ந்த கபில்தேவ், ஷியாம் சுந்தா், முத்துவேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில் சிதம்பரம் நகா்மன்றத் துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு ஆா்ப்பாட்டத்தை விளக்கி பேசினாா்கள்.

இதற்கிடையே, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் ஊதிய உயா்வை உடனே வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்ட செயலா் கோ.மாதவன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.