நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

காா் மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிதம்பரத்தில் மோட்டா் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவா் மீது காா் மோதியதில், அவா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

சிதம்பரத்தில் மோட்டா் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவா் மீது காா் மோதியதில், அவா் உயிரிழந்தாா்.

சிதம்பரம் சிவஜோதி நகரை சோ்ந்தவா் மணிகண்டன் மகன் தீபக் (17), இவா் சிதம்பரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் டூ பயின்று வந்தாா். இந்நிலையில் மாணவன் வெள்ளிக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில், சிதம்பரத்திலிருந்து சீா்காழி செல்லும் புறவழிச்சாலையில் சாலையை கடந்தபோது, கடலூரில் இருந்து வந்த ஒரு காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் மாணவா் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்தாா். பின்னா்அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்ட அவா், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு மாணவன் தீபக் உயிரிழந்தாா். இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.