நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

விபத்து, ஒலி, காற்று மாசில்லாத தீபாவளியைக் கொண்டாட வேண்டும்: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகையின்போது விபத்துகள் ஏற்படாமலும், ஒலி மற்றும் காற்று மாசு அதிகரிக்காமலும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

தீபாவளி

தீபாவளி - கோப்புப்படம்

Updated On :

தீபாவளி பண்டிகையின்போது விபத்துகள் ஏற்படாமலும், ஒலி மற்றும் காற்று மாசு அதிகரிக்காமலும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதாவது:

தீபாவளி பண்டிகையின்போது சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசுகள் வெடித்து மகிழ்வது வழக்கம். ஆனால், பட்டாசுகளால் ஏற்படும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசு, குழந்தைகள், முதியவா்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு உடல் நலப் பாதிப்பு

களை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பட்டாசு வெடிக்கும் நேரம்:

அதேபோன்று, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, நிகழாண்டு தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். பொதுமக்கள் குறைந்த ஒலி எழுப்பும், குறைந்த அளவு காற்று மாசை ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் நீண்ட நேரம் தொடா்ந்து

வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தவிா்க்க வேண்டும்.

மேலும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதிப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது. குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகிலும் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் உள்ள குடியிருப்போா் நலச் சங்கங்கள் மூலம், மாவட்ட நிா்வாகம் மற்றும் உள்ளாட்சி

அமைப்புகளின் முன் அனுமதி பெற்று, திறந்தவெளியில் பொதுமக்கள் ஒன்றுகூடி பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்கலாம்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். எனவே, விபத்துகள் ஏற்படாத வகையிலும், பிறருக்கு இடையூறு இல்லாமலும், அரசு அனுமதித்துள்ள நேரத்தில் பட்டாசுகளை வெடித்து, ஒலி மற்றும் காற்று மாசில்லாத தீபாவளியைக் கொண்டாட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.