ஒலி, காற்று மாசு இல்லா தீபாவளி: மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தல்
திருச்சி மாவட்ட மக்கள் விபத்தில்லாத, ஒலி மற்றும் காற்று மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளி - கோப்புப்படம்.
திருச்சி மாவட்ட மக்கள் விபத்தில்லாத, ஒலி மற்றும் காற்று மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளித் திருநாளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவா். ஆனால், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீா், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.
பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசால் சிறு குழந்தைகள், வயதான பெரியோா்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகா்கள் உடல், மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், சுற்றுச் சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில், இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுச் சூழலைப் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும், தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளைத் தவிா்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும்.
குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

