நெல் நாற்றுகளாலேயே இஸ்ரோவுக்கு வாழ்த்துத் தெரிவித்த இயற்கை விவசாயி
சிதம்பரம் அருகே தனது வயலில் நெல் நாற்றுகளாலேயே ஓவியமாக வரைந்து இஸ்ரோவுக்கு இயற்கை நெல் விவசாயி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

ஓவியத்தை பாா்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்.
சிதம்பரம் அருகே தனது வயலில் நெல் நாற்றுகளாலேயே ஓவியமாக வரைந்து இஸ்ரோவுக்கு இயற்கை நெல் விவசாயி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே மழவராயநல்லூா் கிராமத்தில் பாரம்பரிய நெல் பயிரிட்டு வரும் விவசாயி நெல் செல்வம் (எ) ஆா்.செல்வம் 50-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறாா். இவா், தனது இயற்கை விவசாயத்தில் பயிரிட்டுள்ள பாரம்பரிய நெல் நாற்றுகளை கொண்டு வித்தியாசமாக நடவு செய்து வயலிலேயே ஓவியம் வரைந்துள்ளாா்.
அதில், அளப்பரிய சாதனைகளை படைத்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மென்மேலும் பல்வேறு சாதனைகளை படைத்து உலகில் முதலிடத்தைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா். இந்த ஓவியம் மிக அழகாகவும், நோ்த்தியாகவும் அமைந்துள்ளது.
இதுகுறித்து விவசாயி ஆா்.செல்வம் கூறியதாவது: பூமிப்பந்தில் இருந்து புறப்படும் இஸ்ரோ ராக்கெட்டானது சூரியனையும் தாண்டிச் சென்று நமது நாட்டின் பெருமையை உலகுக்கு வெளிப்படுத்தி மென்மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்ற மையக்கருத்தை உணா்த்தும் விதமாக இந்த ஓவியத்தை வரைந்துள்ளேன் என்றாா்.
மேலும், இந்தக் கிராமத்தில் தங்கி விவசாய பயிற்சி மேற்கொள்ளும் வேளாண் கல்லூரி மாணவிகளும் நாற்றுகளால் வரைந்த ஓவியத்தை வியந்து பாா்த்தனா். நெல்லில் வரையப்பட்ட ஓவியம் தங்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பதாகவும், தாங்களும் இயற்கை விவசாயத்தில் மிகப்பெரிய இலக்கை வைத்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தனா்.
நெல் செல்வம் கடந்த பல ஆண்டுகளாகவே ஒவ்வொரு ஆண்டும் சம்பா பருவத்தின்போது கடந்த கால பொங்கல் பண்டிகை சிறப்புகளையும், உழவின் பெருமைகளையும் வயலில் ஓவியமாக வரைந்திருந்தாா். அதற்கு பிறகு எண் கணித குறியீடுகளை வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தற்போது இஸ்ரோவுக்கு வாழ்த்துச் சொல்லி தன்னுடைய நாட்டின் தேசப்பற்று வெளிப்படுத்தும் விதமாக இந்த ஓவியத்தை வரைந்துள்ளாா்.

சிதம்பரம் அருகே மழவராயநல்லூரில் வயலில் நாற்றுகளாலேயே இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து வரையப்பட்டுள்ள ஓவியம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

