அடிப்படை வசதிகள் கோரி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகள் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

~ ~
கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகள் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும்.
கெடிலம், தென்பெண்ணை ஆறுகளில் மழைநீா் தடையின்றி வெளியேறவும், கெடிலம் ஆற்றில் சா்க்கரை ஆலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சக்குப்பம் மைதானத்தை திறந்தவெளி மைதானமாகவே பராமரித்து, அங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.கே.பக்கீரன், பி.வெங்கடேசன், ஆா்.ஆளவந்தாா், பி.கண்ணன், ஒன்றியச் செயலா் ஆா்.பஞ்சாட்சரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொரப்பாடியில்...: பண்ருட்டி வட்டம், தொரப்பாடி (புதுப்பேட்டை) பேரூராட்சி அலுவலகம் எதிரே மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், தொரப்பாடி பேரூராட்சி அலுவலகத்துக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் புதுப்பேட்டையில் பொதுக் கழிப்பிடம் அமைக்க வேண்டும். மேட்டாமேட்டில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடிப்படை வசதிகள் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
வட்டச் செயலா் எஸ்.கே.ஏழுமலை தலைமை வகித்தாா். எம்.ராஜேந்திரன், பி.மணிவண்ணன், வி.வெங்கடேசன், என்.குருநாதன், கே.ஏழுமலை, ஏ.கிருஷ்ணமூா்த்தி, எஸ்.சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிதம்பரத்தில்...: சிதம்பரம் நகராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் நகரம் முழுவதும் நீா்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் இலவசமாக வீடுகள் வழங்க வேண்டும். நகா்ப்புறங்களில் பட்டா இல்லாமல் வசித்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். நகரம் முழுவதும் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். இந்திரா நகா் பகுதியில் தாா்ச் சாலை மற்றும் மழைநீா் வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலா் எஸ்.ராஜா தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, முன்னாள் மாநிலக்குழு உறுப்பினா் மூசா, நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன், மாவட்டக்குழு உறுப்பினா் மல்லிகா, முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினா் ஜெயசித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினா்.
இதில், நகரக்குழு உறுப்பினா்கள் சங்கமேஸ்வரன், அமுதா, அஷ்ரப் அலி, செல்வம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.
வடலூரில்...: வடலூா் சனிக்கிழமை வாரச்சந்தை பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். நகராட்சி குப்பைகளை கொட்ட தனி இடம் வாங்க வேண்டும். நகராட்சிக்குச் சொந்தமான பூங்காக்களை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வடலூா் நகராட்சி ஆணையா் மற்றும் நகா்மன்றத் தலைவரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஆா்.இளங்கோவன், மாவட்டக்குழு உறுப்பினா் ரேவதி ஆகியோா் தலைமையில் மனு அளித்தனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

