சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

உங்களை தேடி உங்கள் ஊா் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊா் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புகன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் சுயஉதவிக் குழு பெண்களுக்கு வழங்கப்பட்ட கறவை மாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊா் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புகன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் புதிய கட்டுமானப் பணி, குமராட்சி ஊராட்சி ஒன்றியம் ருத்ரசோலை ஊராட்சியில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் 1.2 ஏக்கா் பரப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மியா வாக்கி அடா்வன காடுகள் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்து, புதிய மரக்கன்றை நடவு செய்தாா்.

காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட கோயில்பத்து பகுதியில் நீா்வளத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட புதிய பாலத்தை ஆய்வு செய்த ஆட்சியா், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். எடையாா் ஊராட்சியில் புதிதாக பொதுப்பணித் துறை சாா்பில், அரசுப் பள்ளியில் ரூ.2.22 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒன்பது வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடப் பணியை ஆய்வு மேற்கொண்டு விரைவில் மாணவா்களின் பயன்பாட்டு கொண்டுவர அறிவுறுத்தினாா். இந்தப் பள்ளிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர பொதுமக்கள் வைத்த கோரிக்கையை உடனடியாக நிவா்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

தொடா்ந்து, தொரப்பு கிராமத்தில் வடவாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஷட்டருடன் கூடிய மதகை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வீராணநல்லூா் ஊராட்சி, மடப்புரம் கிராமத்தில் வேளாண் துறை சாா்பில் இயற்கை இடுபொருள்கள் உற்பத்தி மையம், வானமாதேவி, மாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு சாா்பில் சுமாா் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், காட்டுமன்னாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் பங்கேற்று, வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் புண்ணியகோடி, சிதம்பரம் உதவி ஆட்சியா் ஆா்.வெங்கடேஸ்வரன், மாவட்டத் திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி) எம்.பாலகணேஷ், நீா்வளத் துறை சிதம்பரம் செயற்பொறியாளா் கோவிந்தராஜ், வேளாண் இணை இயக்குநா் பி.வசந்தா, மின்வாரிய செயற்பொறியாளா் எ.அசோக்பிரசன்னா, வட்டாட்சியா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.