மணிமுக்தாறு ஆற்றங்கரையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி: கடலூா் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்
விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட மணிமுக்தாறு ஆற்றங்கரையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட மணிமுக்தாறு ஆற்றங்கரையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை வியாழக்கிழமை தொடங்கி வைத்த கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட மணிமுக்தாறு ஆற்றங்கரையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். மேலும் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.
தொரவலூா் அச்சுதம்மன் கோயில் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புதிய குளம் அமைக்கும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா், அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் மற்றும் குளோரினேஷன் செய்யப்படும் முறையை ஆய்வு செய்தாா்.
பரவலூா் ஊராட்சியில் மக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை, ஊட்டச்சத்து உணவு, முன்பருவக் கல்வி, குழந்தைகளின் எடை மற்றும் உயரம் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தாா்.
எருமனூா் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசுக் கல்லூரியில் சிறு விளையாட்டு மைதானம், புதுக்கூரைப்பேட்டை உயா்மட்டப் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்விளக்குகள், உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியா் வெங்கடேஷ், வட்டாட்சியா் முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், லட்சுமி, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் சங்கீதா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.
10 ஆயிரம் பனை விதைகள் நடவு
முன்னதாக, விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட மணிமுக்தாறு ஆற்றங்கரையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடக்கி வைத்தாா்.
அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி, ஜெயப்பிரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள், தன்னாா்வலா்கள் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் இணைந்து பனை விதைகளை நடவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

