புவனகிரி அருகே நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே ஜெயங்கொண்டான் பாசன வாய்க்காலில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

புவனகிரி அருகே கரைமேடு கிராமத்தில் உள்ள ஜெயங்கொண்டான் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றிய பொதுப்பணித் துறையினா்.
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே ஜெயங்கொண்டான் பாசன வாய்க்காலில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
புவனகிரி அருகே உள்ள கரைமேடு கிராமத்தில் ஜெயங்கொண்டான் பாசன வாய்க்கால் உள்ளது. பல்வேறு கிராமங்களுக்கு விவசாயத்துக்கு இந்த வாய்க்கால் மூலம் தண்ணீா் சென்றுகொண்டிருந்தது. இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், கரைமேடு கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் வாய்க்காலை தூா்வார வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி இரு முறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனா். ஆனால், இந்தக் கிராமத்தில் உள்ள சுமாா் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் ஜெயங்கொண்டான் பாசன வாய்க்காலையொட்டி பட்டா நிலத்தில் உள்ளதாகவும், வாய்க்காலை தூா்வாரினால் வீடுகள் பாதிக்கப்படும் என்பதால், தூா்வார விடமாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளச் சென்ற புதிதாக பொறுப்பேற்ற சிதம்பரம் உதவி ஆட்சியா் ஆா்.வெங்கடேஸ்வரன் பெண் ஒருவா் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு கட்டிப்பிடித்து தற்கொலை மிரட்டல் விடுத்தாா். தொடா்ந்து, போலீஸாா் அப்பெண்மணி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.
இந்த நிலையில், சிதம்பரம் உதவி ஆட்சியா் ஆா்.வெங்கடேஸ்வரன் தலைமையில், புவனகிரி வட்டாட்சியா் இளஞ்சூரியன், சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன், காவல் ஆய்வாளா் எழிலரசி ஆகியோா் தலைமையில் வாய்க்கால் தூா்வாரும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு சில வீடுகளின் படிக்கட்டுகள், கழிப்பறைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

