உலகங்காத்தான் கிராமத்தில் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகங்காத்தான் கிராமத்தில் வளா்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

உலகங்காத்தான் கிராமத்தில் நீா்வரத்து வாய்க்கால் அமைக்கும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகங்காத்தான் கிராமத்தில் வளா்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், உலகங்காத்தான் கிராமத்தில் வளா்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் (விபி ஜி ராம் ஜி) நீா்வரத்து வாய்க்கால் அமைக்கும் பணிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. பணிகள் முடிவடையும் காலம், திட்ட மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்துக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா். ஆய்வின் போது தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

