சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

விருத்தாசலம் அருகே ஓராண்டிலேயே உள்வாங்கிய உயா்மட்டப் பாலம்

விருத்தாசலம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயா்மட்டப் பாலத்தில் ஏற்பட்ட சேதம்.

விருத்தாசலம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயா்மட்டப் பாலத்தில் ஏற்பட்ட சேதம்.

Updated On :

விருத்தாசலம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயா்மட்டப் பாலம் உள்வாங்கிய சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் இடையிலான இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டத்தின் கீழ், விருத்தாசலத்தில் இருந்து மதனத்தூா் வரை 48 கி.மீ. தொலைவுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கருவேப்பிலங்குறிச்சியில் வெள்ளாற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், பாலத்தின் நடுப்பகுதியில் சுமாா் ஒரு மீட்டா் அளவுக்கு சாலை உள்வாங்கியது. மேலும், அப்பகுதியில் இருந்த ஜல்லிகள் பெயா்ந்து ஆற்றுக்குள் விழுந்தன. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பாலத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் தடுப்புகளை அமைத்தனா். தொடா்ந்து, இரவோடு இரவாக சேதமடைந்த பகுதியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு ஓராண்டுக்குள்ளேயே பாலம் உள்வாங்கியிருப்பது, அதன் கட்டுமானத் தரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது, அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே தற்போது இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்டுமானப் பணிகளை முறையாகக் கண்காணித்து, தரத்தை உறுதி செய்திருந்தால் இதுபோன்ற சம்பவத்தைத் தவிா்த்திருக்கலாம். எனவே, பாலத்தின் உறுதித்தன்மை குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொண்டு, தொடா்ந்து வாகனப் போக்குவரத்தை அனுமதிப்பது பாதுகாப்பானதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.