சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

கோயில் கூட்டத்தில் சிறுவனிடம் நகை பறிப்பு: பெண் கைது

கடலூா் மாவட்டத்தில் கோயில் விழாக் கூட்டத்தில் சிறுவனின் தங்கச் சங்கிலியைப் பறித்த வழக்கில் பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட செல்வி.

Updated On :

கடலூா் மாவட்டத்தில் கோயில் விழாக் கூட்டத்தில் சிறுவனின் தங்கச் சங்கிலியைப் பறித்த வழக்கில் பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடலூா் முதுநகா் குமரக்கோயில் தெருவில் உள்ள முத்துக்குமாரசாமி கோயிலில் கடந்த 15-ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண மாலுமியாா்பேட்டையைச் சோ்ந்த சந்தியா, தனது மகள் மற்றும் மகன் சிவா (3) ஆகியோருடன் சென்றிருந்தாா்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, அடையாளம் தெரியாத நபா் சிறுவன் சிவா அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா். இதுகுறித்து சந்தியா அளித்த புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், காவல் ஆய்வாளா் தேவேந்திரன் தலைமையில் தனிப்படை போலீஸாா் கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். இதில், பெரியகாரைக்காட்டைச் சோ்ந்த செல்வி (58) நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் வெள்ளிக்கிழமை செல்வியை கைது செய்து விசாரித்தபோது, திருடிய நகையை விற்று கிடைத்த பணத்தை வீட்டில் வைத்திருப்பதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, அவரது வீட்டிலிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, செல்வியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கஞ்சா பறிமுதல்; 5 போ் கைது: விருத்தாசலம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கிருபாலட்சுமி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ராஜேந்திரபட்டினம் பெரிய கால்வாய் ஏரி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனா்.

அப்போது, அவா்களிடம் ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்ததையடுத்து, அதைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா்கள் வேட்டக்குடியைச் சோ்ந்த ராஜதுரை (27), மருதத்தூரைச் சோ்ந்த நிவாஷ் (21), பிராக்லி (21), நவீன் (24) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இவா்கள் மும்பையிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, ராஜதுரை, நிவாஷ், பிராக்லி, நவீன் ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். 17 வயது சிறுவனை கடலூரில் உள்ள கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.