பண்ருட்டியில் காகங்கள் உயிரிழப்பு: மக்கள் அச்சம்
விருத்தாசலம், கம்மாபுரம் பகுதிகளைத் தொடா்ந்து, பண்ருட்டி பகுதியிலும் காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி திருவதிகையில் இறந்த காகத்தை கவ்விச் சென்ற தெருநாய்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம், கம்மாபுரம் பகுதிகளைத் தொடா்ந்து, பண்ருட்டி பகுதியிலும் காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூா், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் கோழிப் பண்ணைகள் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த கோழிப் பண்ணைகளில் இருந்த ஆயிரக்கணக்கான கோழிகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தன. தகவலறிந்த கால்நடை மருத்துவக் குழுவினா் உயிரிழந்த கோழிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா். இந்த ஆய்வறிக்கை முடிவில் கோழிகளுக்கு எச்5என்1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
கோழிகளைத் தொடா்ந்து, விருத்தாசலம், கம்மாபுரம் பகுதிகளில் காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்த காகத்தை தெருநாய் ஒன்று கவ்விச் சென்றதை காண முடிந்தது.
கோழிகளிடம் எச்5என்1 பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், காகங்களின் உயிரிழப்புக்கும் பறவைக் காய்ச்சல் காரணமா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

