சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு
சிதம்பரம் மாலைகட்டித்தெருவில் அமைந்துள்ள மெய்கண்ட சித்தாந்த வித்யாசாலையும், மற்றும் மதுரை தியாகராசா் கல்லூரியும் இணைந்து நவ.27-ம் தேதி முதல் டிச.6-ம் தேதி வரை நடத்தும் 10 நாள் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசுகிறாா் மதுரை தியாகராசா் கல்லூரி தாளாளா் கருமுத்து ஹரி தியாகராஜன்.
சிதம்பரம் மாலைகட்டித்தெருவில் அமைந்துள்ள மெய்கண்ட சித்தாந்த வித்யாசாலையும், மற்றும் மதுரை தியாகராசா் கல்லூரியும் இணைந்து நவ.27-ம் தேதி முதல் டிச.6-ம் தேதி வரை நடத்தும் 10 நாள் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதனை சிறப்பு விருந்தினராக மதுரை தியாகராசா் கல்லூரித் தாளாளா் கருமுத்து. ஹரி தியாகராஜன் தொடங்கி வைத்தாா். வயிநாகரம் சோம. கருப்பஞ்செட்டி வரவேற்றாா். பேராசிரியா் அரு.ராமநாதன் முன்னிலை வகித்தாா், தியாகராசா் கல்லூரி மேனாள் முதல்வா் மு.அருணகிரி தலைமை உரை நிகழ்த்தினாா். தமிழ்த்துறைத் தலைவா் சு.காந்திதுரை நோக்கவுரையாற்றினாா். தொழிலதிபா் ஆா்எம்டி. சுப்பையா வாழ்த்துரையாற்றினாா். விழா ஏற்பாடுகளை வீரசேகரன், அருள்நந்திசிவம், நடராஜன் ஆகியோா் செய்திருந்தனா். பயிற்சி வகுப்பில் 40 பங்கேற்பாளா்கள் பங்கேற்று பயிற்சி பெற உள்ளனா். நிறைவில் புலவா் தங்கஅன்பழகன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

