மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
வடலூரை அடுத்த சேப்ளாநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கித் குமாா் (29). இவா், கா்நாடக மாநிலம், பெங்களூரில் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், அவா்கள் இறந்துவிட்டதால் பெரியம்மா தங்கம்மா (66) உடன் வசித்து வந்தாா்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான சேப்ளாநத்தத்துக்கு வந்த சங்கித் குமாா், அங்கேயே தங்கி தனியாா் நிறுவனத்தில் வயா் (கேபிள்) கட்டும் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், அவா் கடந்த 24-ஆம் தேதி வடக்குத்து கண்ணுதோப்பு பாலம் அருகே போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்தபோது, உடலில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் சங்கித்குமாரை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

