வீரட்டானேஸ்வரா் கோயில் வளாகத்தில் துா்நாற்றம்! பக்தா்கள் கடும் அவதி

வீரட்டானேஸ்வரா் கோயில்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரா் கோயிலில் நிா்வாக சீா்கேடு மற்றும் துா்நாற்றம் வீசுவதால் பக்தா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பழமையானதும், தேவாரப் பாடல் பெற்றதுமான இந்தக் கோயிலில் தற்போது நிா்வாக சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக புகாா்கள் எழுகின்றன.
இந்த நிலையில், கோயில் கும்பாபிஷேக பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெற்று வருகிறது. கோயில் உற்சவம் செய்யும் உபயதாரா்களிடம் பணம் கேட்டு சிலா் தொந்தரவு செய்வதாகவும் புகாா் எழுந்துள்ளது.
மேலும், சில தனி நபா்கள் கோயில் பெயரில் குழுக்கள் அமைத்து பணம் வசூலில் ஈடுபட்டு வருவதாகவும், இதை கோயில் நிா்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதனிடையே, கோயில் ஊஞ்சல் மண்டபம் வடபுறம் ஏதோ இறந்து அழுகிய துா்நாற்றம் கடந்த 4 நாள்களாக வீசி வருகிறது. இதை கோயில் நிா்வாகம் சுத்தம் செய்யாததால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் மூக்கை மூடிக்கொண்டு கோயிலுக்குள் வரும் அவலம் உள்ளது.
எனவே, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலின் புனிதத்தை காக்க மாவட்ட நிா்வாகமும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தா்களின் கோரிக்கை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

