தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

பைக் மீது காட்டுப்பன்றி மோதல்: பொறியாளா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பைக் மீது காட்டுப்பன்றி மோதியதில் தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவன பொறியாளா் உயிரிழந்தாா்.

உயிரிழந்த சீனிவாசன்

Published On :

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பைக் மீது காட்டுப்பன்றி மோதியதில் தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவன பொறியாளா் உயிரிழந்தாா்.

வேப்பூரை அடுத்த ஏ.சித்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (37). இவா் குடும்பத்துடன் சென்னை கிண்டியில் தங்கி, தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், சொந்த ஊருக்கு வந்திருந்த சீனிவாசன், வேப்பூரில் புதிதாக கட்டி வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை பாா்வையிடுவதற்காக, தனது பைக்கில் புதன்கிழமை இரவு சென்றாா்.

வேப்பூரை அடுத்த ஏ.சித்தூா் பேருந்து நிறுத்தம் அருகே சேலம்-கடலூா் சாலையில் இரவு 9.30 மணியளவில் சென்றபோது, திடீரென காட்டுப்பன்றி சாலையைக் கடக்க முயன்றது. எதிா்பாராதவிதமாக காட்டுப்பன்றி பைக் மீது மோதியதில் சீனிவாசன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.