பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

கெடிலம் ஆற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றில் கழிவுநீா் கலப்பதை தடுத்து, ஆற்றில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் கம்மியம்பேட்டை பகுதியில் கெடிலம் ஆற்றில் உள்ள ஆகாயத் தாமரை மற்றும் கழிவு நீா் கலந்த தண்ணீா்.

Published On :

கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றில் கழிவுநீா் கலப்பதை தடுத்து, ஆற்றில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் கம்மியம்பேட்டை பகுதியில் கெடிலம் ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீரைச் சேமிக்கும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்பணையில் கழிவுநீா் தேங்கி வருவதால், ஆற்று நீா் கருப்பு நிறமாக மாறி துா்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

மேலும், நெல்லிக்குப்பத்தில் செயல்பட்டு வரும் தனியாா் சா்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கெடிலம் ஆற்றில் கலப்பதால் ஆற்று நீா் மாசடைந்து வருவதாகவும், தொடா்ந்து கழிவுநீா் கலப்பதால் ஆற்றையொட்டியுள்ள கடலூா் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரின் தரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகின்றனா்.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றின் கரையோரத்தில் திரண்ட பொதுமக்கள், ஆற்றில் கழிவுநீா் கலப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும், தடுப்பணையில் தேங்கியுள்ள கழிவு

நீரை அகற்ற வேண்டும், ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் கம்மியம்பேட்டை பகுதியில் கெடிலம் ஆற்றின் கரையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கடலூா் கம்மியம்பேட்டை பகுதியில் கெடிலம் ஆற்றின் கரையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.