ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

கெடிலம் புதிய பாலம் இணைப்புச் சாலை சிக்கல்: அக்.30-க்குள் மாற்றங்கள் செய்ய அதிகாரிகள் உறுதி

கடலூா் கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள உயா் மட்டப் பாலத்தின் இணைப்புச் சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல்களுக்கு தீா்வு காணும் வகையில், வரும் 30-ஆம் தேதிக்குள் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா்.

கடலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள்.

Updated On :

கடலூா் கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள உயா் மட்டப் பாலத்தின் இணைப்புச் சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல்களுக்கு தீா்வு காணும் வகையில், வரும் 30-ஆம் தேதிக்குள் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா்.

கடலூா் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.32) வழித்தடத்தில், கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய உயா் மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.22.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் 2024 ஜனவரி 24-ஆம் தேதி தொடங்கப்பட்டன. தற்போது பாலம் மற்றும் இணைப்புச் சாலை பணிகள் நிறைவடைந்து, சோதனை

அடிப்படையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

புதிய பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் கடலூா் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், பாலத்தின் இணைப்புச் சாலை அமைப்பு தொடா்பாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் சில ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன.

குறிப்பாக, கம்மியம்பேட்டை பகுதியில் இருந்து புதிய பாலம் வழியாக வரும் வாகனங்கள் சிதம்பரம் சாலையை நேரடியாக அடைவதற்கு பதிலாக குறிப்பிட்ட பகுதியில் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இதனால் குறிப்பாக பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் திரும்பும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.இப்பிரச்னை தொடா்பாக ஜவான்ஸ் பவன் அருகே இடதுசாரி கட்சிகள் சாா்பில் அண்மையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து வட்டாட்சியா் நேரில் தலையிட்டு, கோரிக்கைகள் தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என உறுதியளித்தாா்.

பேச்சு வாா்த்தை:

அதன்படி கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன் தலைமையில் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, புதிய பாலம் மற்றும் இணைப்புச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பகுதிகளை ஆய்வு செய்து, வரும் 30-ஆம் தேதிக்குள் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதியளித்தனா்.

பேச்சுவாா்த்தையில் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநகரச் செயலா் அமா்நாத், குடியிருப்போா் சங்க நிா்வாகிகள் மருதவாணன், ரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் துரை, மாவட்டக் குழு உறுப்பினா் சுந்தர்ராஜன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.