சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :

இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியோா் மற்றும் சீா்மரபினா் பிரிவுகளைச் சோ்ந்த 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவ, மாணவிகள் பிரதமரின் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சாா்பில், இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியோா் மற்றும் சீா்மரபினா் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2026-27ஆம் கல்வியாண்டில், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளில் (100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகள்) 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த தகுதியான மாணவ, மாணவிகள் புதியது அல்லது புதுப்பித்தல் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ், 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்காக ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.75 ஆயிரமும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.1.25 லட்சமும் மத்திய அரசால் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இதில், மாணவிகளுக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியோா் அல்லது சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும், 2025-26ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ாக தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்ற பள்ளியில் பயின்றவராக இருக்க வேண்டும்.

கடந்த 2025-26ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ, மாணவிகள், 2026-27ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான கல்வி உதவித்தொகையை புதுப்பிக்க, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அக்.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.