தில்லியில் மாணவா்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அருகே சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.
இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, தில்லி ஜந்தா் மந்தரில் போராடிய மாணவா்கள், இளைஞா்கள் மீது காவல் துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், ஞானேஷ்குமாா் பதவி விலக வலியுறுத்தியும் சிதம்பரம் அருகே சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இந்திய மாணவா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், சங்கத்தின் மாவட்டச் செயலா் கே.பி.சௌமியா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அன்பு மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
அண்ணாமலைப் பல்கலை.யில் கருப்பு பட்டை அணிந்து...: இதேபோல, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாவட்டத் தலைவா் பூபதி, மாநிலக் குழு உறுப்பினா் ஜீவானந்தம், மாவட்ட இணைச் செயலா் சிவநந்தினி, செங்கதிா், சிவன் ராஜ், மாவட்டக் குழு உறுப்பினா் திருமால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

