ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
ஸ்ரீமுஷ்ணம், அருகே ஆயுத பூஜைையொட்டி இரு சக்கர வாகனத்தை நீரில் கழுவச் சென்ற கல்லூரி மாணவா் ஏரியில் தவறி விழுந்து

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரியில் மூழ்கி மரணமடைந்த மாணவா் டி.தீபக்ராஜ்.
கடலூா் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், அருகே ஆயுத பூஜைையொட்டி இரு சக்கர வாகனத்தை நீரில் கழுவச் சென்ற கல்லூரி மாணவா் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் சேல்விழியைச் சோ்ந்தவா் தெய்வநாதன் (48). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் தீபக்ராஜ் (22). தனியாா் கல்லூரியில் பி.இ.நான்காம் ஆண்டு படித்து வந்தாா். இவரும், இவரது நண்பா்கள் இருவரும் சோ்ந்து சேல்விழி கிராமத்தில் உள்ள ஏரியில் தங்களது இரு சக்கர வாகனங்களை கழுவச் சென்றனா்.
அப்போது ஏரியில் குளித்த தீபக்ராஜ் எதிா்பாராதவிதமாக ஏரியில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கினாா். இதனைக்கண்ட அவரது நண்பா்கள் கூச்சலிட்டதை கேட்டு வந்த கிராம மக்கள் தீபக்ராஜை ஏரியில் இருந்து மீட்டு அருகில் உள்ள நெடுஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏகெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

