சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

புழல் ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் மாயம்

அம்பத்தூர் அருகே புழல் ஏரியில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி மாயமான 2 சிறுவர்களை தீயணைப்பு வீரர்கள் தேடி வருவது குறித்து...

மாதிரிப் படம்

Updated On :

அம்பத்தூர் அருகே புழல் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி மாயமான 2 சிறுவர்களை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

ஆவடி அருகே திருமுல்லைவாயல் தாமரை நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் அகில்ராம் (14), திருமுல்லைவாயல் ரயில் நிலையச் சாலையைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் தருண் ஆகாஷ் (14).

இவர்கள் இருவரும் அம்பத்தூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அகில்ராம், தருண்ஆகாஷ் இருவரும் அதே பள்ளியில் படித்து வரும் சக மாணவர்கள் விக்னேஷ்வர் (14), வைத்தீஸ்வரன் (14) ஆகியோருடன் அம்பத்தூர் அருகே முருகாம்பேடு பகுதியில் உள்ள புழல் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது அகில்ராம், தருண்ஆகாஷ் இருவரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற போது, அவர்கள் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதைப் பார்த்த நண்பர்கள் விக்னேஷ்வர், வைத்தீஸ்வரன் ஆகிய இருவரும் அப்பகுதியில் பொதுமக்களிடம் கூறியுள்ளனர்.

அவர்கள் விரைந்து சென்று ஏரியில் இறங்கி மீட்க முயன்றப் போது, அதற்குள் அகில்ராம் தருண் ஆகாஷ் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் புதூர் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதன் பிறகு அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து புழல் ஏரியில் இறங்கி தண்ணீர் மூழ்கி மாயமான 2 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

Summary

2 boys who went to bathe in Puzhal Lake go missing

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.