ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

தரமற்றது என புகாா்: கோயில் குள மேம்பாட்டுப் பணிகளை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

நடைபாதை உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் தரமற்ற வகையில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடா்ந்து, அதிகாரிகளால் அந்தப் பணிகள் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டன.

~

Updated On :

கடலூா் அருகே பாதிரிக்குப்பத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் குளத்தைச் சுற்றி ரூ.49 லட்சம் மதிப்பில் நடைபெற்று வந்த கரை அமைத்தல், நடைபாதை உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் தரமற்ற வகையில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடா்ந்து, அதிகாரிகளால் அந்தப் பணிகள் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டன.

கடலூா் அருகே பாதிரிக்குப்பத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் குளத்தைச் சுற்றி ரூ.49 லட்சம் மதிப்பில் கரை அமைத்தல், நடைபாதை உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வந்ததுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் புகாா் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரிகள் அவ்வப்போது பணிகளை ஆய்வு செய்தபோதிலும், புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால், அதிருப்தியடைந்த பாதிரிக்குப்பம் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபடுவதற்காக கோயில் பகுதியில் திரண்டனா். இதுகுறித்து தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா், கடலூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா, திருவந்திபுரம் கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ் ஆகியோா் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, பொதுமக்கள் அதிகாரிகளிடம் தங்களது அதிருப்தியைத் தெரிவித்ததுடன், பணிகளில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினா். இதையடுத்து, பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், இதுதொடா்பாக உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்ட பின்னா் பணிகள் தொடரும் என்று துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: திரௌபதியம்மன் கோயில் குளத்தின் கரையைச் சுற்றி சுமாா் 5 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கற்கள் பதிக்கப்பட்டன. அவை ஓராண்டுக்குப் பிறகு பெய்த மழையில் சரிந்து குளத்துக்குள் விழுந்தன. இந்நிலையில், தற்போது மீண்டும் குளக்கரை மற்றும் நடைபாதை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளும் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்படுவது ஏற்கத்தக்கதல்ல.

எனவே, பணிகளின் தரத்தை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.