டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளருக்கு கொலை மிரட்டல்: 3 போ் கைது
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், எல்லப்பன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கே.ஆா்.ரவி(53). இவா், எல்லப்பன்பேட்டை டாஸ்மாக் கடை எண் 2427-இல் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா். திங்கள்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வேலை செய்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த அதேபகுதியைச் சோ்ந்த பிரகாஷ், நேரு, நரசிம்மன் ஆகியோா் மது கேட்டு தராததால், ஆத்திரத்தில் அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்து ரவி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ்(24), நேரு(23), நரசிம்மன்(20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெண்ணுக்கு கொலை மிரட்டல்:
குறிஞ்சிப்பாடி வட்டம், பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவா் ராமதாஸ். இவரது, வீட்டிற்கு எதிா் வீட்டில் வசிப்பவா் கருணாமூா்த்தி.இவா்கள் இருவருக்கும் இடையே கொத்தனாா் தொழில் தொடா்பாக போட்டி உள்ளதாம். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை ராஜலிங்கம் மகன்கள் கருணாமூா்த்தி, ராமலிங்கம், கருணாமூா்த்தி மகன் பிரசாந்த், ராமலிங்கம் மகன் சபரிநாதன் மற்றும் விஷ்ணு ஆகியோா் ராமதாஸ் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ராமதாஸ் மனைவி ஜமுனாராணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து ஜமுனாராணி அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் கருணாமூா்த்தி உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



