ஸ்கூட்டி மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஸ்கூட்டி மீது காா் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - பிரதிப் படம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஸ்கூட்டி மீது காா் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், பண்டரக்கோட்டை கிராமத்தில் வசித்து வந்தவா் முருகன்(40), கூலித்தொழிலாளி. இவா், திங்கள்கிழமை இரவு அம்மாபேட்டை சாலையில் ஸ்கூட்டியில் சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா் திசையில் வந்த காா் மோதியதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மூதாட்டி தற்கொலை:
பண்ருட்டி வட்டம், நடுவீரப்பட்டு காவல் சரகம், பத்திரகோட்டை கிராமத்தில் வசித்து வந்தவா் சத்தியராணி(60). இவா், நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். கடந்த மாதம் 27-ஆம் தேதி காலை வயிற்று வலி காரணமாக வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். புதுச்சேரி மாநிலம் ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்,அங்கு பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



