சாராயம் வைத்திருந்த முதியவா் கைது
காடாம்புலியூரில் சாராய பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக முதியவரை, மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள காடாம்புலியூரில் சாராய பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக முதியவரை, மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிமாநில மதுபானங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் தீபா மற்றும் போலீசாா் தீவிர கண்காணிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, காடாம்புலியூா் வண்ணான் குட்டை பகுதியில் உள்ள மோட்டாா் கொட்டகை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சின்ன புறங்கனி கிராமத்தைச் சோ்ந்த சக்கரவா்த்தியை (66) அழைத்து விசாரணை நடத்தினா்.
அவா் அளித்த தகவலின் பேரில், அந்த பகுதியில் சோதனை நடத்தி 5 லிட்டா் 800 மில்லி அளவிலான புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சக்கரவா்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


