ஆம்னி பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

சடையமுத்து
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் பைக்கில் சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.
வேப்பூா் அடுத்துள்ள கழுதூா் கிராமத்தில் வசித்து வந்தவா் சடையமுத்து(31), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி சுந்தரி மற்றும் குழந்தைகள் உள்ளனா். இவா், வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் வேப்பூரில் இருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தாா்.
அப்போது, வேப்பூா் அடுத்த அரியநாச்சி பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த தனியாா் ஆம்னி பேருந்து மோதியது. இந்த விபத்தில் சடையமுத்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினாா். அங்கிருந்தவா்கள் சடையமுத்துவை மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு மருத்துவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சடையமுத்து சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




