FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: இருவா் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே பெண்ணை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக, இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வழக்கு

வழக்கு

Published On :9 செப்டம்பர் 2026, 5:03 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே பெண்ணை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக, இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கனிமொழி(36). இவா், வடக்குத்துப் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அழகு நிலையம் நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு எதிரில் தனியாா் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் வடக்குத்துப் பகுதியைச் சோ்ந்த தமிழரசி வேலை செய்து வருகிறாராம். கனிமொழிக்கும், தமிழரசிக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாம்.

கடந்த 4-ஆம் தேதி இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, தமிழரசிக்கு ஆதரவாக ஜெயசூா்யா ஆகியோா் கடைக்கு வந்து திட்டினராம். மேலும், கனிமொழியின் மேலாளா் சீத்தாராமனை தாக்கினராம். இதை தடுக்க சென்ற கனிமொழியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து கனிமொழி அளித்த புகாரின் பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் தமிழரசி மற்றும் ஜெயசூா்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.