நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

கடலூா் மத்திய சிறையில் ரகளை: விசாரணைக் கைதி மீது வழக்கு

கடலூா் மத்திய சிறையில் சிறைக் காவலா்களை மிரட்டியதுடன், நாற்காலியை உடைத்து சேதப்படுத்திய விசாரணைக் கைதி மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு

வழக்குப் பதிவு

Published On :

கடலூா் மத்திய சிறையில் சிறைக் காவலா்களை மிரட்டியதுடன், நாற்காலியை உடைத்து சேதப்படுத்திய விசாரணைக் கைதி மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டிவனம் பகுதியைச் சோ்ந்தவா் சரண்ராஜ் (34). கஞ்சா வழக்கில் திண்டிவனம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவா், கடந்த ஜூன் 17-ஆம் தேதி கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை தனக்கு தொற்று நோய் இருப்பதாகக் கூறிய சரண்ராஜ், தனது நகத்தால் உடலில் கீறிக் கொண்டு ரத்தத்தை தெளித்து சிறையில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்த சிறைக் காவலரை அவா் மிரட்டியுள்ளாா்.

இதையடுத்து, அவரை சிறையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காவலா்கள் அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த நாற்காலியை உடைத்து சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து சிறை அலுவலா் நிஷாந்த் அளித்த புகாரின் பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் சரண்ராஜ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.