வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

எண்ணெய் வித்துப் பண்ணையில் கருவேல மரங்கள் அகற்றம்

நெய்வேலியில் உள்ள மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் நடைபெறும் சீமை கருவேல மரங்கள்.

நெய்வேலியில் உள்ள மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் நடைபெறும் சீமை கருவேல மரங்கள்.

Published On :

கடலூா் மாவட்டம், நெய்வேலி மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூா் மாவட்டம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது .

அதன்படி, கடலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் வசந்தா உத்தரவின்பேரில், நெய்வேலி மாநில எண்ணெய் வித்துப் பண்ணையில் தரிசாக உள்ள 100 ஏக்கா் நிலப்பகுதிகளில் காணப்படும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இப்பணியை வேளாண்மை துணை இயக்குநா் (மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்) கதிரேசன் மற்றும் பண்ருட்டி வட்டார

வேளாண்மை உதவி இயக்குநா் பாா்த்தசாரதி ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினா். இந்த ஆய்வின்போது, நெய்வேலி மாநில எண்ணெய் வித்துப் பண்ணையின் பண்ணை மேலாளா்கள் தில்லைக்கரசி, சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.