வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

என்எல்சி சுரங்க வாயிலில் தொழிலாளா்கள் போராட்டம்

என்எல்சி 2-ஆவது சுரங்க வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள்.

என்எல்சி 2-ஆவது சுரங்க வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள்.

Published On :

பணி உத்திரவாதம் தரக்கோரி, நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க நுழைவு வாயில் முன்பு வேலையைபுறக்கணித்து ஒப்பந்தத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

நெய்வேலி, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது சுரங்கத்தில், ராட்சத இயந்திரங்கள் பராமரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள்கடந்த 6 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு செப். 30-ஆம் தேதி உடன் ஒப்பந்தம் முடிவடைவதால், என்எல்சி இந்தியா நிா்வாகம் ஒப்பந்தத் தொழிலாளா்களை, நிறுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு, வேலையில் இருந்து நிறுத்தினால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, ஒப்பந்தத் தொழிலாளா்கள் சுமாா் 68 போ், பணிக்கு செல்லாமல், பணிப் புறக்கணிப்பு செய்து, 2-ஆவது சுரங்க நுழைவு வாயில் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, என்எல்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தியதை அடுத்து அவா்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.