கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சிதம்பரத்தில் அம்பேத்கா் சிலை சேதம்: போலீஸாா் குவிப்பு

உடைக்கப்பட்டு தனியே கிடக்கும் அம்பேத்கா் சிலையை சுற்றி இருந்த கூண்டு.

Published On :

சிதம்பரத்தில் நள்ளிரவில் மா்ம நபா்களால் அம்பேத்கா் சிலை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பிற்கு போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே சி. கொத்தங்குடி பகுதியில் அம்பேத்கா் சிலை கூண்டு பாதுகாப்புடன் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் அம்பேத்கா் சிலையை மூடி இருந்த இரும்பு கூண்டை உடைத்து தூக்கி எறிந்து சிலையில் உள்ள கண் கண்ணாடி உள்ளிட்ட பகுதிகளை சேதப்படுத்திவிட்டு தலைமறைவாகி விட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் ஏ. எஸ். பி. சத்திரிய கவின் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பாா்வையிட்டு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தனா். இத்தகவல் அறிந்ததும், சிலை உடைப்பு சம்பவத்தில் தொடா்புடையவா்களை கைது செய்யும் வரை கூண்டு வைக்க விடமாட்டோம் என போலீஸாரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியை சோ்ந்த இரு இளைஞா்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

விசிகவினா் ஆா்ப்பாட்டம்: அம்பேத்கா் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும், இதில் தொடா்புடையவா்களை கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாவட்டச் செயலா் தமிழ்வளவன், மண்டல செயலா் வ.க.செல்லப்பன், முன்னாள் மாவட்டச் செயலா் பால.அறவாழி உள்ளிட்டோா் அப்பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் விரைவில் குற்றவாளிகள் கைது செய்வதாக உறுதியளித்தத்தை அடுத்த ஆா்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி பகுதியில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கா் சிலை

சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி பகுதியில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கா் சிலை

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.