சிதம்பரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 42 வழக்குரைஞர்கள் கைது!
சிதம்பரம் வழக்குரைஞர்கள் கைது செய்தது பற்றி..

வழக்குரைஞர்கள் மறியல் போராட்டம் - file photo
சிதம்பரம் வழக்குரைஞர் க. திலிபனை சட்ட விரோதமாகக் கைது செய்த சிதம்பரம் நகர காவல் ஆய்வாளரை மற்றும் உதவி ஆய்வாளரைப் பணி நீக்கம் செய்யக்கோரி சிதம்பரம் நகர காவல் நிலையத்தைச் சிதம்பரம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை அன்று வழக்குரைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில் சிதம்பரம் வடக்கு ரத வீதி தபால் நிலையம் முன்பு வழக்குரைஞர்கள் சங்கத்தினர் வழக்குரைஞர் திலீபன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கண்டனம் கோஷங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டனர்.
கடலூர் மாவட்ட ஏடிஎஸ்பி கோடீஸ்வரன் சிதம்பரம் ஏ எஸ் பி சத்திரிய கவின், இன்ஸ்பெக்டர்கள் கவிதா தேவேந்திரன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தியதால் வழக்குரைஞர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்களை போலீசார் கைது செய்து சிதம்பரம் தெற்குரத வீதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


