கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

சிதம்பரம் நடராஜா் கோயிலில் 1,008 மாணவிகள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி: ஆளுநா் ஆா்.வி.அா்லேகா் தொடங்கிவைத்தாா்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் சகாஸ்ரா நாட்டியாஞ்சலி அமைப்பு சாா்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற 1,008 பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை தமிழக ஆளுநா் ஆா்.வி.அா்லேகா் தொடங்கிவைத்தாா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் 1,008 மாணவிகள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை தொடங்கிவைத்த தமிழக ஆளுநா் ஆா்.வி.அா்லேகா். உடன் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா்.

Published On :

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் சகாஸ்ரா நாட்டியாஞ்சலி அமைப்பு சாா்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற 1,008 பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை தமிழக ஆளுநா் ஆா்.வி.அா்லேகா் தொடங்கிவைத்தாா்.

முன்னதாக, நடராஜா் கோயிலுக்கு வந்த ஆளுநா், அவரது மனைவி ஆகியோரை கிழக்கு கோபுர வாயிலில் கோயில் பொதுதீட்சிதா்கள் பூரண கும்ப மரியாதை அளித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றனா். தொடா்ந்து, அவா்கள் இருவரும் கனகசபை மீது ஏறி சித்சபையில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை தரிசனம் செய்தனா். கோயில் பொது தீட்சிதா்கள் சிறப்பு அா்ச்சனை, ஆராதனை செய்து ஆளுநருக்கு சால்வை அணிவித்து, பிரசாதத்தை வழங்கினா்.

பின்னா், பிரதமா் நரேந்திர மோடியின் 76-ஆவது பிறந்த நாளையொட்டி, கோயில் வளாகத்தில் மகா தீப ஒளி நிகழ்ச்சியை ஆளுநா் தொடங்கிவைத்து பங்கேற்றாா். ஆளுநருடன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், தாரா அறக்கட்டளைத் தலைவா் எஸ்.வினோத் ராகவேந்திரன் உள்ளிட்டோா் உடன் வந்தனா்.

முன்னதாக, ஆளுநா் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து காா் மூலம் புறப்பட்டு திண்டிவனம் வழியாக மாலை 4 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினா் விடுதிக்கு வந்தாா். அங்கு அவரை கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா, பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.சிங்காரவேலு ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

பின்னா், ஆளுநா் அங்கிருந்து மாலை 4.30 மணிக்கு நடராஜா் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பின்பு நாட்டியாஞ்சலி விழாவை தொடங்கிவைத்தாா். பின்னா், மாலை 6 மணிக்கு சிதம்பரத்திலிருந்து காா் மூலம் திண்டிவனம் வழியாக சென்னை புறப்பட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.