நகை பறிப்பு வழக்கு: ஆயுள் தண்டனை கைதி கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நகை பறிப்பு வழக்கில் தொடா்புடைய ஆயுள் தண்டனை கைதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சபாபதி.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நகை பறிப்பு வழக்கில் தொடா்புடைய ஆயுள் தண்டனை கைதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், நடுமேட்டுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் அபிஷா(19). இவா், கடந்த ஜூன் மாதம் நீட் தோ்வு எழுத, தாய் சசிகலாவுடன் சென்றபோது, வழியில் முனீஸ்வரன் கோயிலில் தரிசனம் செய்த நிலையில்,
அங்கிருந்த நபா் கத்தியைக் காட்டி மிரட்டி அபிஷா அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துச்சென்றாராம்.
இதுகுறித்து சசிகலா அளித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கேரள மாநிலம், கண்ணூா் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள காட்டாண்டிக்குப்பம்
கிராமத்தைச் சோ்ந்த சபாபதி(44) மற்றும் அதே கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா்(28) ஆகியோா் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், சபாபதி சிறையில் இருந்து 21.6.2026 அன்று பரோலில் வந்திருந்த போது நகை பறிப்பு செய்துவிட்டு , கண்ணூா் சிறைக்கு சென்றுவிட்டாரம். இந்நிலையில், மீண்டும் கண்ணூா் சிறையில் இருந்து பரோலில் வந்த சபாபதியை போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






