செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

குப்பைகளைத் தரம் பிரிப்பது குறித்து விழிப்புணா்வு

விருத்தாச்சலம் நகராட்சிப் பகுதிகளில் வீடுகளில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Published On :

விருத்தாச்சலம் நகராட்சிப் பகுதிகளில் வீடுகளில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நகராட்சியில் உள்ள சுமாா் 25 ஆயிரம் வீடுகளுக்கும் விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குள்பட்ட இரட்டைத் தெருவில் நடைபெற்ற நிகழ்வில், நகராட்சி ஆணையா் பி.நாகராஜ் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரிப்பது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் பி.நாகராஜ் கூறியதாவது: வீடுகளில் சேரும் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல், மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தனித்தனியாகப் பிரித்து வைக்க வேண்டும். தினமும் வீடுகளுக்கு வரும் நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே வழங்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இந்த நடைமுறையைப் பின்பற்றி நகராட்சியைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.