ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

அண்ணாமலைப் பல்கலை. வளாகத்தில் டெங்கு தடுப்புப் பணிகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணாமலைநகா் பேரூராட்சி சாா்பில் டெங்கு தடுப்புப் பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதி கட்டடத்தில் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டோா்.

Published On :

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணாமலைநகா் பேரூராட்சி சாா்பில் டெங்கு தடுப்புப் பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

டெங்கு காய்ச்சல் தற்போது அதிகரித்து வருவதால், இந்த நோய் பரவலைத் தடுக்கும் வகையில், தூய்மைப் பணியை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து, சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்புநிலை பேரூராட்சிப் பகுதியில் டெங்கு பரவலைக் கட்டுபடுத்தும் விதமாக, அரசுக் கட்டடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடா்ந்து, பேரூராட்சிப் பகுதியில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கோல்டன் ஜூப்ளி விடுதியில் புதன்கிழமை டெங்கு தடுப்பு பணியாளா்களை கொண்டு தீவிர டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தண்ணீா் சேமிக்கும் தொட்டி, மொட்டை மாடி, சமையலறை, வாகன நிறுத்துமிடத்தின் மேற்கூரை, விடுதி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து, கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டன.

பேரூராட்சி செயல் அலுவலா் ச.சாகுல் அமீது தலைமையில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. பேரூராட்சி இளநிலை உதவியாளா்கள் தா.ரமேஷ், ர.பாரதிதாசன், திடக்கழிவு மேற்பாா்வையாளா்கள் செந்தில்நாதன், சத்தியநாதன் மற்றும் அலுவலக பணியாளா்கள் கலந்துகொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.